Limited Time SaleUS$51.50 cheaper than the new price!!
| Management number | 231617946 | Release Date | 2026/06/18 | List Price | US$34.34 | Model Number | 231617946 | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| Category | |||||||||
தமிழில் நல்ல நூல்கள் தமிழில் நல்ல நூல்கள் வருவது படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது. அடிப்படையில் ஏனோ எப்படியோ ஒரு கோணல், ஒரு கீறல் ஏற்பட்டுவிட்டது. ஏன் என்று விசாரித்து அறிந்து கொள்ள முயலுவது அவசியமாகும். ஒரு நல்ல சுகாதாரச் சூழ்நிலையில், தமிழை, மொழியை, இனத்தை, இலக்கியத்தை, கருத்துக்களை வளர்க்க ஒரு முயற்சியும் செய்யப்படவில்லை. திட்டுத்திட்டாக சிலருடைய முயற்சி அறிவும் ஆற்றலும் சுகாதாரமும் நிறைந்ததாக நமக்குத் தோன்றுகிறது- அவர்களில் ஜோதிராமலிங்கம், கோபாலகிருஷ்ண பாரதியார், வேதநாயகம்பிள்ளை, ஆறுமுக நாவலர், பி. ஆர். ராஜமையர், அ. மாதவையா, டாக்டர் உ.வே.சாமிநாதயர், சுப்ரமணியபாரதி, வ.வே.சு.ஐயர் போன்றவர்கள் இலக்கியத்தைப் பற்றிய வரையில் முக்கியமானவர்களாக எனக்குத் தோன்றுகிறது. சென்றுவிட்ட- அதுவும் சமீபத்தில் சென்றுவிட்ட- காலத்தை மதிப்பிடும்போது- அந்தக் காலப்பகுதியில் வாழ்ந்து பாடுபட்டவர்கள் எவரெவர் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்கள் என்று கணித்துக் கொள்வது- நமது காலகட்டத்தின் நினைப்பிலிருந்து கண்டுகொள்வது- அவசியமாகும். அப்படிக் கவனிக்கும்போது சென்ற நூற்றாண்டின் இலக்கிய சரித்திரத்திலே அதாவது 1820 முதல் 1920 வரை என்று எடுத்துக்கொண்டால், இந்த ஒன்பது பேரைத் தவிர வேறு யாரையுமே கவனிக்க வேண்டியது அவசியம் இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. பல அம்சங்களில் இவர்களையும் விடப் பெரியவர்கள், குறிப்பிட்ட ஒரு பகுதிக்குச் சிறப்பாக சேவை செய்தவர், பலர் இருக்கலாம்தான். ஆனால் அவர்களில் யாரும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு இந்த ஒன்பது பேரைப் போல வழிசெய்து தரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். எழுதுவது அதிகமாக இருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை - பரந்ததாக இருக்க வேண்டும். ஒரு தனித்துவம் இருப்பதாக இருக்க வேண்டும். வாழ்வில் ஏற்படுகிற பல அனுபவங்களையும் ஒன்று சேர்த்து ஒருமைப்படுத்திக் கொண்டு சிந்தித்தவன் எழுத்துத்தான் இலக்கியமாக இருக்க முடியும்.இப்படி ஒருமைப்படாதவன், சிந்திக்காதவன் எழுத்து பிச்சைக்காரன் வாந்திதான். ஏதோ எங்கேயோ எப்படியோ ஒன்றிரண்டு நல்லதாக வந்துவிட்டால் போதாது. நல்லது வருவதற்கு எந்த நிமிஷமும் நிமித்தங்கள் இருக்க வேண்டும் - அப்போதுதான் ஒருவனை இலக்கியாசிரியன் என்று சொல்லலாம் - அவன் எழுதாவிட்டாலும் கூட சரிதான். Read more
| ASIN | B0DP1G8HW1 |
|---|---|
| Language | Tamil |
| File size | 384 KB |
| Page Flip | Enabled |
| Word Wise | Not Enabled |
| Reading age | 5 - 18 years |
| Print length | 264 pages |
| Accessibility | Learn more |
| Screen Reader | Supported |
| Publication date | November 24, 2024 |
| Enhanced typesetting | Enabled |
If you notice any omissions or errors in the product information on this page, please use the correction request form below.
Correction Request Form